டுபாயில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தல்: விநியோகித்த மூவர் கைது!
டுபாயில் பதுங்கி இருந்து இலங்கையில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடும் நிழல் உலக தாதா டுபாய் இஷாரவின் மூன்று சகாக்கள் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டி மாவட்டம், கம்பளை பகுதியில் வைத்தே கம்பளை பொலிஸாரால் இன்று (17) காலை இவர்கள் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளனர். போதைப்பொருள் சகிதம் சிக்கியுள்ள இவர்களிடம் தற்போது பல கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர். டுபாயில் இருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் டுபாய் இஷார என்பவரின் போதைப்பொருளை கம்பளை பகுதியில் இவர்களே […]




