இலங்கை செய்தி

பொங்கு தமிழ் பிரகடனம்: 25 ஆவது நினைவேந்தல் யாழ். பல்கலையில்!

  • January 17, 2026
  • 0 Comments

யாழ்.பல்கலைக்கழகத்தில் பொங்கு தமிழ் பிரகடனத்தின் 25 ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்று சனிக்கிழமை(17) நினைவு கூரப்பட்டது. பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து பல்கலைக்கழக வளாகத்திற்குள் உள்ள பொங்குதமிழ் நினைவு தூபி முன் கூடி நினைவு கூர்ந்திருந்தனர். தமிழ் மக்களின் அபிலாசைகளான சுயநிர்ணய உரிமை, மரபுவழித்தாயகம், தமிழ் தேசியம் என்பவை அங்கிகரிக்கப்பட வேண்டும் என்பவை பொங்குதமிழ் பிரகடனமாக வெளியிடப்பட்டது. 2001 ஆண்டு ஜனவரி 17 ஆம் திகதி பொங்கு தமிழ் பிரகடனம் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!