ஒரு நாடாக மீண்டெழுவோம்: தைத் திருநாளில் ஜனாதிபதி அழைப்பு!
” எந்தவொரு இருளுக்கும் பிறகு ஒளி பிறக்கும் என்று நாம் உறுதியாக நம்புகிறோம். ஒரு தேசமாக மீண்டெழுவதற்கு ஒன்றிணைவோம்.” இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது பொங்கல் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் பொங்கல் வாழ்த்து செய்தி வருமாறு, உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்களால் மிகுந்த பக்தியுடனும் உற்சாகத்துடனும் இன்று (15) தைப்பொங்கல் தினம் கொண்டாடப்படுகின்றது. வெற்றிகரமான விளைச்சலுக்கு உதவிய சூரியக் கடவுளுக்கும், கால்நடைகளுக்கும், இயற்கை அன்னைக்கும், நன்றி உணர்வை எடுத்தியம்பும் கொண்டாட்டமாக தைப்பொங்கல் தினம் அமைகின்றது. […]




