சஜித்துக்கு ரணில் கொடுத்த “பிறந்தநாள் பரிசு” – தெற்கு அரசியலில் திடீர் திருப்பம்!
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு Sajith Premadasa , ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க Ranil Wickremesinghe தொலைபேசி ஊடாக பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அத்துடன், சஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற மத வழிபாட்டு நிகழ்வுக்கு தமது பிரதிநிதிகளையும் அவர் அனுப்பியுள்ளார். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் 59 ஆவது பிறந்தநாள் இன்றாகும். இதனை முன்னிட்டு கங்காராம விகாரையில் விசேட வழிபாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர். […]





