இலங்கையிலிருந்து விடைபெறும் அமெரிக்க தூதுவர் பிராந்திய பாதுகாப்பு குறித்து கழுகுப்பார்வை!
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் Julie Chung , பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை Air Vice Marshal Sampath Thuyacontha சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இலங்கையில் தனது பதவிகாலத்தை நிறைவுசெய்துகொண்டு எதிர்வரும் 16 ஆம் திகதி கொழும்பிலிருந்து அமெரிக்க தூதுவர் தாயகம் திரும்புகின்றார். இந்நிலையிலேயே பாதுகாப்பு செயலாளரை அவர் நேற்று பிரியாவிடை நிமித்தம் பாதுகாப்பு அமைச்சில் சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பின் போது, பாதுகாப்புச் செயலாளரும் அமெரிக்கத் தூதுவரும் இரு நாடுகளுக்கும் […]





