மீண்டும் தலைதூக்கும் டெங்கு!
பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்துள்ளதாக சுகாதாரப் பிரிவு எச்சரித்துள்ளது. கண்டி மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் இந்;நிலைமையக் காணப்படுவதாக தேசிய டெங்கு நோய் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. 2026 ஆம் ஆண்டில் முதல் 12 நாட்களுக்குள் 2 ஆயிரத்து 17 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் 41 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்குரிய வழிமுறைகளை பின்பற்றுமாறு கோரப்பட்டுள்ளது. […]





