பூஸா சிறைக்குள் நடப்பது என்ன? தரைக்குள் இருந்து 15 தொலைபேசிகள் மீட்பு!
பாதாள குழு உறுப்பினர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள பூஸா சிறைச்சாலையிலிருந்து இன்றும் (27) 15 கையடக்க தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளன. பூஸா சிறைச்சாலையானது அதி உயர் பாதுகாப்பு சிறைச்சாலையாகக் கருதப்படுகின்றது.எனினும், அங்கு தொலைபேசி பயன்படுத்தப்படுவதாக உளவு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதனையடுத்து கடந்த சில நாட்களாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் சிறைச்சாலைக்குள் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டுவருகின்றது. இதற்கமைய பாதாள குழு உறுப்பினர்களான பொடி லெசி , தெமட்டகொட சமிந்த, மிதிகம ருவான் உள்ளிட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறை அறைகளில் இருந்தும் தொலைபேசிகள் […]




