தொடரை வெல்லுமா இந்தியா? நியூசிலாந்துடன் இன்று மோதல்!
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகின்றது. குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி வாகை சூடியது. எனவே, 2ஆவது போட்டியிலும் வென்று தொடரைக் கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி களமிறங்குகின்றது. மறுபுறத்தில் இப்போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாய நிலையில் நியூசிலாந்து அணி களம் காண்கின்றது. […]





