இன்று கூடுகிறது நாடாளுமன்றம்! முக்கிய விடயங்கள் குறித்து ஆராய்வு!!
நாடாளுமன்றம் இன்று (6) முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடுகின்றது. 2026 ஆம் ஆண்டுக்கான முதலாவது நாடாளுமன்ற கூட்டத்தொடர் எதிர்வரும் 9 ஆம் திகதிவரை நடைபெறும். இதன்போது முக்கியத்துவமிக்க பல விடயங்கள் தொடர்பில் ஆராயப்படவுள்ளன. குறிப்பாக அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடித்துக்கொள்வதற்குரிய விவாதம் நடைபெற்று, வாக்கெடுப்பு நடத்தப்படும். அத்துடன், மாகாணசபைத் தேர்தலை எந்த முறைமையில் நடத்துவது என்பது தொடர்பில் ஆராய்வதற்குரிய நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கும் யோசனையும் முன்வைக்கப்படவுள்ளது. மேலும் சமகால அரசியல் தொடர்பிலும் […]




