உலகின் முதல் தானியங்கிப் கப்பல் சேவை ஜப்பானில் ஆரம்பம்
உலகில் முதன்முறையாகத் தானியங்கித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பயணிகள் கப்பல் சேவை ஜப்பானில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் உள்ள ஒகாயாமா, ஷோடோஷிமா தீவுக்கு இடையே இந்த கப்பல் சேவை நேற்று வியாழக்கிழமை (டிசம்பர் 11) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தொலைதூர தீவுகளில் வசிக்கும் மக்களின் போக்குவரத்தை இது உறுதிசெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முயற்சி வெற்றியடையும் பட்சத்தில், கடல் சார்ந்த தளவாடங்களை நிலைப்படுத்தவும் விபத்துகளைக் குறைக்கவும் இந்தத் தானியங்கி முறை உதவும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.




