அயோத்திக்குள் முஸ்லிம்கள் நுழையத் தடை: கோரிக்கை முன்வைப்பு!
முஸ்லிம் மக்கள், அயோத்தியில் நுழைவதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின், உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலைக் காண முஸ்லிம்களும் அனுமதிக்கப்படுகின்றனர். எனினும், கருவறைக்குள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. இந்நிலையில் ராமர் கோயிலில் கடந்த வாரம் முஸ்லிம் இளைஞர் ஒருவர், சால்வை விரித்து தொழுகையில் ஈடுபட முயற்சித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு தரப்பினர் இளைஞரை தடுத்து நிறுத்தினர். விசாரணைக்கு பிறகு அவர் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவம் அயோத்தியைச் […]




