வெனிசுலாமீதான இராணுவ ஆக்கிரமிப்பை வன்மையாகக் கண்டிக்கிறது ஜே.வி.பி.!
வெனிசுலாவுக்குள் அமெரிக்கா முன்னெடுத்த இராணுவ நடவடிக்கையை ஜே.வி.பி. (JVP) வன்மையாகக் கண்டித்துள்ளது. தேசிய மக்கள் சக்தியின் பிரதான பங்காளிக்கட்சியே ஜே.வி.பியாகும். வெனிசுவேலா விவகாரம் தொடர்பில் அக்கட்சியால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை வருமாறு, “ சுயாதீனமான, தன்னாதிக்கமுள்ள ஒரு நாடான வெனிசுலாவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இராணுவ ரீதியான ஆக்கிரமிப்பு சார்ந்த இடையீட்டினை நாம் கடுமையாக கண்டிக்கிறோம். உலகின் எந்தவொரு சுதந்திரமான, தன்னாதிக்கமுடைய நாட்டினை போன்றே வெனிசுலாவிலும் எதிர்காலத்தை தீர்மானிக்கின்ற மற்றும் ஆட்சியாளர்கள் யார் என்பதை தீர்மானிக்கின்ற இறைமைத் தத்துவம் […]





