பொழுதுபோக்கு

காதலர் தினத்தில் புது நடிகையை கரம்பிடிக்கிறாரா தனுஷ்?

  • February 3, 2026
  • 0 Comments

தனது முதல் மனைவியை Aishwarya Rajinikanth விவகாரத்து செய்துள்ள நடிகர் தனுஷ் Dhanush தற்போது மகன்மாருடன் வாழ்த்து வருகின்றார். இந்நிலையில் அவரது வாழ்க்கையில் அடுத்த கட்டம் மற்றும் புதிய இணை தொடர்பில் அவ்வப்போது பல்வேறு தகவல்கள் கசிவது வழமை. அந்த வகையில் நடிகை மிருணாள் தாக்கூரை தனுஷ் கரம் பிடிக்கவுள்ளார் என்ற தகவல் காட்டுத் தீயாக பரவியது. காதலர் தினத்தில் இருவரும் கரம்பிடிப்பார்கள் எவும் கூறப்பட்டது. இந்நிலையில் இது அப்பட்டமான பொய்யென அறிவித்துள்ளார் நடிகை மிருணாள் தாக்கூர் […]

பொழுதுபோக்கு

சினிமாவில் மாயமான ஹ்ருதிஹாசன் மீண்டும் களத்தில்!

  • January 31, 2026
  • 0 Comments

நடிகை ஸ்ருதிஹாசன் Shruti Haasan ஒரு கால கட்டத்தில் தமிழ் சினிமாவை கலக்கியவர். கவர்ச்சி ஆயுதத்தை கையிலெடுத்து இளைஞர்களின் இதயங்களை ஆக்கிரமித்தவர். எனினும், 2018 ஆம் ஆண்டுக்கு பிறகு அவரது காட்டில் மழையே இல்லை. தமிழ் சினிமா உலகில் இருந்து காணாமல்போனவராகக் கருதப்பட்டார். தற்போது மீண்டும் களத்துக்கு வந்துள்ளார். எனினும், நடிகை ஸ்ருதிஹாசன், துல்கர் சல்மான் ஜோடியாக ‘ஆகாசம்லோ ஒக தாரா’ என்ற படத்தில் தற்போத நடித்து வருகிறார். தெலுங்கில் உருவாகும் இப்படம் தமிழ் உள்ளிட்ட 5 […]

popular-actress-injured-by-dog-bite-health-update பொழுதுபோக்கு

நாயால் நடிகைக்கு வந்த சோதனை!

  • January 22, 2026
  • 0 Comments

நாய்க்கு நேர்த்திக்கடன் நிறைவேற்றிய பிரபல நடிகை Deena Sravya சர்ச்சை புயலில் சிக்கியுள்ளார். அவரின் இந்த செயல் இந்து மதத்தை அவமதிக்கும் நடவடிக்கையாகும். எனவே, அவர் உடன் மன்னிப்பு கோர வேண்டும் என சமூக வலைத்தளங்களில் கருத்து மோதல் ஆரம்பமாகியுள்ளது. எனினும், மன்னிப்பு கோராமல் தனது தாயார் ஊடாக விளக்க அறிக்கையொன்றை விடுத்துள்ளார் சம்பந்தப்பட்ட நடிகை. சரி அப்படி என்னதான் நடந்தது என்பதை விரிவாக பார்ப்போம். தெலங்கானாவில் உள்ள மேடாரம் பகுதியில் சம்மக்கா-சாரக்கா அம்மன் திருவிழா வெகு […]

பொழுதுபோக்கு

மறுமணம் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் பார்த்திபன்!

  • January 21, 2026
  • 0 Comments

தமிழ் சினிமாவில் எப்போதும் புதுவிதமான அணுகுமுறையைக் கையாளும் நபர்களில் நடிகர் பார்த்திபன் முதன்மையானவர். புதிய பாதை மூலம் தமிழ் திரையுலகில் தடம் பதித்து இயக்குனராகவும் நடிகராகவும் தனக்கான வழியில் தனித்துவத்துடன் பயணித்துவருகின்றார். நடிகை சீதாவை காதலித்து 1990இல் மரம் பிடித்தார். இவர்களுக்கு அபிநயா, கீர்த்தனா என இரண்டு மகள்களும், ராதாகிருஷ்ணன் என்ற வளர்ப்பு மகனும் உள்ளனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் 2004ல் விவாகரத்து பெற்றனர். சீதா மறுமணம் முடித்திருந்தாலும் பார்த்திபன் தனியாகவே வாழ்ந்து வருகிறார். […]

அரசியல் இலங்கை செய்தி

கல்வி மறுசீரமைப்பு அவசியம்: மேர்வின் சில்வா வலியுறுத்து!

  • January 19, 2026
  • 0 Comments

இலங்கையின் கலாசாரத்துக்கே உரித்தான வகையில் கல்வி மறுசீரமைப்பு அவசியம் என்று முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார். வழக்கு விசாரணையொன்றுக்காக நீதிமன்றம் வந்திருந்த மேர்வின் சில்வாவிடம், நீதிமன்ற வளாகத்தில் வைத்து கல்வி மறுசீரமைப்பு பற்றி ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர் மேலும் கூறியவை வருமாறு, “ கல்வி மறுசீரமைப்பு அவசியம். அது எமது கலாசாரம் மற்றும் எமது நாட்டுக்கே உரிய வகையில் இடம்பெற வேண்டும். சர்வமதத் தலைவர்கள், துறைசார் நிபுணர்களுடன் இது சம்பந்தமாக கலந்துரையாட […]

பொழுதுபோக்கு

என் நேர்மை மக்களுக்கு புரியும்: ரஹ்மான் விளக்கம்!

  • January 19, 2026
  • 0 Comments

“ சில நேரங்களில் நோக்கங்கள் தவறாக புரிந்து கொள்ளப்படுகின்றன. யாரையும் காயப்படுத்த வேண்டும் என நான் விரும்பவில்லை.” – என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார். தனது பேட்டி சர்ச்சையானது விவகாரம் தொடர்பிலேயே ரஹ்மான் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “ பாலிவுட் சினிமா துறை மத வாதம் சார்புள்ளதாக மாறிவிட்டது. கடந்த 8 ஆண்டுகளில் அதிகார கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றம் இதற்கு காரணமாக இருக்கலாம். படைப்பாற்றல் இல்லாதவர்களிடம் முடிவெடுக்கும் அதிகாரம் […]

அரசியல் இலங்கை செய்தி

சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்: மன்னிப்பு கோருமாறு அழுத்தம்!

  • January 14, 2026
  • 0 Comments

மகா சங்கத்தினரை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட அமைச்சர் கே.டி. லால்காந்தK.D. Lalkantha , உடனடியாக மன்னிப்பு கோர வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசி அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க கூறியவை வருமாறு, “மிகிந்தலை தலைமை விகாராதிபதிமீது தரக்குறைவான வார்த்தை பிரயோகத்தை மேற்கொண்டு அமைச்சர் லால்காந்த விமர்சித்துள்ளார். கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் கருத்து வெளியிடும் சுதந்திரம் மிகிந்தலை தேரருக்கு இருக்கின்றது. எனினும், குற்றச்சாட்டுகளை தாங்கிக்கொள்ள […]

இந்தியா

31 வயதான அமைச்சர் மகனின் காலில் விழுந்து வணங்க முயன்ற 73 வயது எம்.எல்.ஏ.!

  • January 9, 2026
  • 0 Comments

இந்தியாவின் தகவல் தொடர்புத்துறை அமைச்சரின் 31 வயது மகனின் காலில் விழுந்து , 73 வயதான பாரதிய ஜனதாக் கட்சியின் எம்.எல்.ஏ., வணங்க முற்பட்ட சம்பவம் தொடர்பில் சமூகவலைத்தளங்களில் பலகோணங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. தேவேந்திர குமார் ஜெயின் என்பவர் மத்திய பிரதேசத்தை சேர்ந்த பாரதிய ஜனதாக் கட்சியின் எம்.எல்.ஏ. ஆவார். தனது 73 ஆவது பிறந்தநாளை அண்மையில் இவர் கொண்டாடினார். இந்திய ஒன்றிய அரசின் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் மகன் மஹாரியமான் சிந்தியாவும் இந்நிகழ்வில் […]

அரசியல் இலங்கை செய்தி

“முதலில் ஜனாதிபதி பதவி விலகட்டும்” – நாமல் சர்ச்சை கருத்து

  • January 5, 2026
  • 0 Comments

“ முதலில் ஜனாதிபதியை பதவி விலகச் சொல்லுங்கள், பிறகு ஆட்சியை பொறுப்பேற்பது பற்றி கதைக்கலாம்.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa எம்.பி. தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நேற்றிரவு விசேட ஆன்மீக வழிபாடு இடம்பெற்றது. இந்நிகழ்வின் பின்னர் நாமல் ராஜபக்ச ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டார். இதன்போது அவரிடம் “ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பதவி விலகினால் நாட்டை பொறுப்பேற்க நாமல் ராஜபக்ச தயார்.” […]

அரசியல் இலங்கை செய்தி

குட்டி நாயா, பெரிய நாயா? சிறிதரன், அர்ச்சுனாவுக்கிடையில் கடும் சொற்போர்!

  • December 26, 2025
  • 0 Comments

நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ். சிறிதரன் மற்றும் அர்ச்சுனாவுக்கிடையில் இன்று (26) கடும் சொற்போர் மூண்டது. யாழ்.மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் நடைபெற்றபோதே இருவரும் சரமாரியாக சொற்கணைகளைத் தொடுத்து கொண்டனர். “குட்டி நாய் மாதிரி குறைத்துக்கொண்டிருக்ககூடாது…” என்று சிறிதரன் எம்.பி., இளங்குமரன் எம்.பியை நோக்கி குறிப்பிட்டார். இதன்போது இடைமறித்த அர்ச்சுனா எம்.பி., நாடாளுமன்ற உறுப்பினர்களை பார்த்து குட்டிநாய், பெரிய நாய் என்று விளிக்ககூடாது என இடித்துரைத்தார். இந்த விடயத்தை அர்ச்சுனா எம்.பி., மீண்டும், மீண்டும் சபையில் சுட்டிக்காட்டினார். இதனால் கடுப்பான […]

error: Content is protected !!