கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக 30 திகதி போராட்டம்!
கிவுல் ஓயா திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. வவுனியா வடக்கு, நெடுங்கேணியில் இப்போராட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி நடக்கும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வவுனியா வடக்கு, முல்லைத்தீவு கிழக்கில் உள்ள தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களை ஆக்கிரமிக்கும் நோக்கில் கிவுல்ஓயா திட்டத்தை மீண்டும் செயற்படுத்த அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என தமிழ்த் தேசியக் கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. இந்த திட்டத்தைக் கைவிடச் செய்வதற்கு அழுத்தம் கொடுப்பதற்கும், இதுதொடர்பான […]




