மின் கட்டணத்தை அதிகரிப்பது மக்கள் ஆணையை காட்டிக்கொடுக்கும் செயல்: சஜித் சீற்றம்!
டித்வா புயலால் இலட்சக் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், மின்சாரக் கட்டணத்தை 11.57 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச Sajith Premadasa குற்றஞ்சாட்டினார். விசேட காணொளியொன்றை இன்று (02) வெளியிட்டே சஜித் பிரேமதாச இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். சஜித் பிரேமதாச மேலும் கூறியவை வருமாறு, வளமான நாட்டையும் அழகான வாழ்க்கையையும் உருவாக்கித் தருவோம் என்ற வாக்குறுதிப் பத்திரத்தின் பேரிலேயே தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தது. ஆனால், வளமான நாட்டையும், அழகான […]




