77 ஆவது குடியரசு தின விழா கோலாகலம்: ராணுவ அணிவகுப்பில் ‘ஆபரேஷன் சிந்தூர்’!
இந்தியாவின் 77 ஆவது குடியரசு தின விழா தலைநகர் டெல்லி உட்பட நாடு முழுவதும் கோலாகலமாக இன்று கொண்டாடப்படுகிறது. டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்றார். 21 குண்டுகள் முழங்க தேசியக் கொடி பறக்கவிடப்பட்டது. தேசத்தின் வலிமையை பறைசாற்றும் வகையில் முப்படைகளின் பிரம்மாண்ட அணிவகுப்பு டெல்லியில் நடைபெற்றது. தலைநகர் டெல்லியில் உள்ள கடமைப் பாதையில் பிரம்மாண்ட விழா நடைபெற்றது. குதிரைப் படை சூழ சாரட் வாகனத்தில் விழாவுக்கு குடியரசுத் தலைவர் […]




