திஸ்ஸ விகாரை காணியை விடுவிக்க மறுப்பா?
யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவிக்க முடியாது என கூறப்பட்டதாகக் வெளியாகும் தகவலை அரசாங்கம் நிராகரித்துள்ளது. திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் தொடர்பில் கொழும்பில் முக்கியத்துவமிக்க கலந்துரையாடலொன்று நடைபெற்றது. இதன்போது காணிகளை விடுவிக்க மறுப்புத் தெரிவிக்கப்பட்டது என சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இது தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முக்கியஸ்தரான அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரனிடம் வினவப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர் கூறியவை வருமாறு, “காணிகளை விடுவிக்க முடியாது என எவரும் கூறவில்லை. […]




