வங்குரோத்து அரசியலின் வெளிப்பாடே நம்பிக்கையில்லாப் பிரேரணை!
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்படும் என்று பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க Mahinda Jayasinghe இன்று (08) தெரிவித்தார். அரசியல் ரீதியில் வங்குரோத்தடைந்துள்ள எதிரணிகள், தமது அரசியல் இருப்புக்காகவே பிரேரணையை முன்வைக்கின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கல்வி மறுசீரமைப்பில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை அடிப்படையாகக்கொண்டு பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைப்பதற்கு பிரதான எதிர்க்கட்சி திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பம் திரட்டும் நடவடிக்கையும் நேற்று ஆரம்பமாகியது. இவ்வாரத்துக்குள் சபாநாயகரிடம் பிரேரணை கையளிக்கப்படும். இந்நிலையிலேயே […]






