இலங்கை செய்தி

“ஷிரந்தியை இலக்கு வைத்து மஹிந்தவை வீழ்த்த முயற்சி”

  • February 3, 2026
  • 0 Comments

“ஷிரந்தி ராஜபக்சவை Shiranthi Rajapaksa இலக்கு வைப்பதன்மூலம் மஹிந்தவை Mahinda Rajapaksa வீழ்த்திவிடலாம் என NPP அரசாங்கம் நினைக்கின்றது. அது ஒருபோதும் நடக்காது.” இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே Manoj Gamage தெரிவித்தார். சிரிலிய விவகாரம் தொடர்பில் பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால், FCID விசாரணை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இது தொடர்பான விசாரணைக்கு ஷிரந்தி ராஜபக்ச அண்மையில் அழைக்கப்பட்டிருந்தார். எனினும், அவர் முன்னிலையாகவில்லை. தனது சட்டத்தரணிகள் ஊடாக இரு […]

இலங்கை செய்தி

ஷிரந்தியுடன் FCID வந்த மஹிந்த: CID சென்றார் நாமல்!

  • February 3, 2026
  • 0 Comments

“ராஜபக்சக்களை சிறையில் அடைத்து, பிரச்சினைகளை திசை திருப்புவதற்கு NPP அரசாங்கம் முற்படுகின்றது.” – என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே Manoj Gamage தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ச Shiranthi Rajapaksa , பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவில் இன்று (03) முன்னிலையானார். அவருடன் மஹிந்த ராஜபக்சவும் வருகை தந்திருந்தார். FCID வளாகத்தில் ஆதரவாளர்களும் திரண்டிருந்தனர். ஷிரந்திக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பட்டன. பாதுகாப்பும் […]

இலங்கை செய்தி

3 ஆம் திகதி முன்னிலையாகுமாறு ஷிரந்திக்கு FCID அறிவுறுத்து!

  • January 31, 2026
  • 0 Comments

பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவில் FCID எதிர்வரும் 03 ஆம் திகதி முன்னிலையாகுமாறு ஷிரந்தி ராஜபக்சவுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது என அறியமுடிகின்றது. ஜனவரி 27 ஆம் திகதி ஷிரந்தி ராஜபக்ச விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார். தனிப்பட்ட காரணங்களினால் முன்னிலையாக முடியாது என தனது சட்டத்தரணிகள் ஊடாக அவர் தெரிவித்திருந்தார். அத்துடன் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாவதற்கு, இரு வார கால அவகாசம் கோரி இருந்தார். எனினும், அவரை 3 ஆம் திகதி முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ச ஆட்சிகாலத்தில் […]

இலங்கை செய்தி

கால அவகாரம் கோரினார் ஷிராந்தி!

  • January 27, 2026
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ச Shiranthi Rajapaksa , பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவில் FCID முன்னிலையாவதற்கு கால அவகாசம் கோரியுள்ளார். மஹிந்த ராஜபக்ச ஆட்சிகாலத்தில் “சிரிலிய” Siriliya எனும் பெயரில் நடத்திசெல்லப்பட்ட வங்கி கணக்கில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் நிதி முறைகேடு தொடர்பில் விசாரணை இடம்பெற்றுவருகின்றது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காகவே ஷிராந்தி ராஜபக்ச இன்று FCID க்கு அழைக்கப்பட்டிருந்தார். எனினும், தனிப்பட்ட காரணங்களால் தன்னால் இன்று முன்னிலையாக முடியாது என […]

அரசியல் இலங்கை செய்தி

மஹிந்தவின் சகா ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ கைது: பின்னணி என்ன?

  • January 5, 2026
  • 0 Comments

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தரான முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ Johnston Fernando இன்று (05) கைது செய்யப்பட்டுள்ளார். அரச வளங்களை முறைகேடாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் FCID அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று எப்.சி.ஐ.டிக்கு ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ வரவழைக்கப்பட்டிருந்தார். வாக்குமூலம் பெறப்பட்டதன் பின்னரே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சதொசவுக்கு லொறி உள்ளிட்ட வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் ஜொன்ஸ்டர் […]

அரசியல் இலங்கை செய்தி

முழு குடும்பத்தையும் சிறையில் அடைக்க முயற்சி: FCID யில் ஆஜர் ஆக முன் ஜொன்ஸ்டன் கதறல்!

  • January 5, 2026
  • 0 Comments

“ நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. எனது குடும்பத்தை சிறை வைப்பதற்குரிய அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையே இது.” – என்று முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ Johnston Fernando தெரிவித்தார். எப்.பி.ஐ.டி FCID எனப்படும் பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவில் இன்று (5) முன்னிலையாவதற்கு முன்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “வாக்குமூலம் பெறுவதற்கு வருமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது. அதற்கமையவே சிஐடி வந்தேன். நேற்றுதான் அறிவித்தல் கிடைக்கப்பெற்று வந்தது. இதற்கு முன்னர் அறிவித்தல் […]

error: Content is protected !!