கட்டுக்கடங்காத காட்டுத்தீ: பற்றி எரியும் விக்டோரியா!
ஆஸ்திரேலியா, விக்டோரியா மாநிலத்தில் காட்டுத் தீ வேகமாக பரவிவருகின்றது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். வெப்ப அலை மற்றும் கடும் காற்றால் இன்று (09) காட்டு தீ வேகமாக பரவக்கூடும் என்பதால் மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தீ விபத்துக்கு மத்தியில் இரு மூவர் காணாமல்போயுள்ளனர் என்று மாநில அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் தீயில் சிக்கி உயிரிழந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகின்றது. விக்டோரியா மற்றும் நியூ சவூத் வேல்ஸ் ஆகிய மாநிலங்களுக்கு இன்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், […]







