அமெரிக்க தூதுவர் விடைபெறுவதை பாற்சோறு சமைத்து கொண்டாடிய கம்மன்பில!
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் Julie Chang நாடு திரும்புவது தொடர்பில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலUdaya Gammanpila . நான்கு வருடகால சாபம் முடிவடைகின்றது எனவும், இது பாற்சோறு சமைத்து கொண்டாட வேண்டிய தருணம் எனவும் அவர் குறிப்பிட்டார். கொழும்பில் இன்று (16) விசேட ஊடக சந்திப்பை நடத்தியே கம்மன்பில இவ்வாறு கூறினார். அத்துடன், ஊடக சந்திப்பில் பாற்சோறு சாப்பிட்டு மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார். ஜுலி சங் 2022 பெப்ரவரி மாதம் முதல் […]




