இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – கைச்சாத்தான முக்கிய ஒப்பந்தம்
இத்தாலி மற்றும் இலங்கைக்கு இடையில் சாரதி அனுமதிப்பத்திரங்களை பரஸ்பரம் அங்கீகரிப்பதற்கான இருதரப்பு ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம் நேற்று (12) இத்தாலியின் ரோம் நகரில் கையெழுத்திடப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது. இலங்கை அரசாங்கம் சார்பில் இத்தாலிக்கான இலங்கைத் தூதுவர் சத்யா ரொட்ரிகோவும், இத்தாலி அரசாங்கம் சார்பில் வெளிவிவகார மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு தொடர்பான பிரதி அமைச்சரும் அரச செயலாளருமான மரியா திரிபோடியும் இந்த […]




