ரணில், சஜித் இணைந்தால் வெற்றி நிச்சயம்: நவீன் நம்பிக்கை
“ ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றிணைந்த பின்னர் கூட்டணியின் தலைமைப்பதவியை சஜித் பிரேமதாச ஏற்பதில் எனக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை.” இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உப தலைவர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார். “ ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணைய வேண்டும். புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் தேர்தலில் இட ஒதுக்கீடுகளை மேற்கொள்ளலாம். முகாமைத்துவ குழவொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும். […]



