தமிழக சட்டப் பேரவையிலிருந்து ஆளுநர் வெளிநடப்பு!
புத்தாண்டில் தமிழக சட்டசபை கூடிய முதல் நாளிலேயே குழப்பம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என். ரவி வெளிநடப்பு செய்துள்ளமை அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேசிய கீதத்தை முதலில் இசைக்காமல் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடியதற்கு எதிர்ப்பு தெரிவித்தே ஆளுநர் வெளிநடப்பு செய்தார் எனக் கூறப்படுகின்றது. தமிழக சட்டசபை இன்று காலை கூடியது. மரபுப்படி ஆளுநர் ஆர்.என். ரவியின் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழக சட்டப்பேரவைக்கு இன்று காலை […]





