அரசியல் இலங்கை செய்தி

ஆட்சியை தக்க வைக்க சூழ்ச்சி: டில்வின் சில்வா மறுப்பு!

  • February 7, 2026
  • 0 Comments

“சூழ்ச்சிமூலம் ஆட்சியை தக்கவைக்கும் எவ்வித நோக்கமும் எமக்கு கிடையாது. மக்கள் விருப்பத்துக்கு மாறாக பலவந்தமாக ஆட்சியில் இருக்கமாட்டோம்.” என்று ஜே.வி.பியின் JVP செயலாளர் டில்வின் சில்வா Tilvin Silva தெரிவித்தார். அரச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார். “ நாட்டைக் கட்டியெழுப்பவே நாம் ஆட்சியைப் பொறுப்பேற்போம். அதனை செய்வதற்கு காலம் எடுக்கும். அதற்குரிய அடித்தளம் தற்போது இடப்பட்டுள்ளது. நாட்டில் ஸ்தீரத்தன்மை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் ஆசியுடன் ஆட்சியை தொடரவே விரும்புகின்றோம். மாறாக மக்கள் விருப்பமின்றி – […]

அரசியல் இலங்கை செய்தி

NPP ஆட்சியை எதிரணியால் கவிழ்க்க முடியாது: அமைச்சர் திட்டவட்டம்!

  • January 22, 2026
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தி NPP அரசாங்கம் சிறப்பாக செயல்பட்டுவருகின்றது. தற்போதைய எதிர்க்கட்சியால் இந்த அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என்று அமைச்சர் சமந்த வித்யாரத்ன samantha vidyaratna தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ நெருக்கடி நிலையில் இருந்த நாட்டையே நாம் பொறுப்பேற்றோம். இதற்கிடையில் பேரிடரும் ஏற்பட்டது. எனினும், சவாலை நாம் எதிர்கொண்டோம். பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. நாட்டில் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டபோது […]

அரசியல் இலங்கை செய்தி

NPP அரசை வீட்டுக்கு அனுப்புவோம்: நாட்டை பொறுப்பேற்க நாமல் தயார் என்கிறது SLPP!

  • January 3, 2026
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் வீட்டுக்கு அனுப்படும். மாகாணசபைத் தேர்தலில் அதற்குரிய ஆரம்ப புள்ளி வைக்கப்படும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அறிவித்துள்ளது. ஜனநாயக வழியில் நாட்டை பொறுப்பேற்பதற்கு நாமல் ராஜபக்ச தயாராகவே இருக்கின்றார் என்று என்று அக்கட்சியின் உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சானக வக்கும்புர Chanaka Wakumbura தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி (SLPP) தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். “ ஸ்ரீலங்கா பொதுஜன […]

அரசியல் இலங்கை செய்தி

என்.பி.பி. ஆட்சி கவிழுமா? பிரதி அமைச்சர் பதிலடி!

  • December 30, 2025
  • 0 Comments

ஆட்சி கவிழ்ப்புக்கு இடமே இல்லை. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை மக்கள் பாதுகாப்பார்கள் என்று பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் திட்டவட்டமாக அறிவித்தார். அரசாங்கத்தின் வீழ்ச்சிப் பயணம் ஆரம்பித்துவிட்டதாகவும், விரைவில் கவிழும் எனவும் எதிரணிகள் கருத்து வெளியிட்டுவரும் நிலையிலேயே பிரதி அமைச்சர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்குவரும்போது, இரு மாதங்களில் ஆட்சியைப் பிடிப்போம் என சஜித் பிரேமதாச கூறினார். அதன் பின்னர் ஆறு […]

error: Content is protected !!