இராணுவம் போதைப்பொருள் கடத்தல்: ஆதாரம் கோருகிறது பாதுகாப்பு அமைச்சு!
வடக்கில் போதைப்பொருள் வியாபாரத்துடன் பாதுகாப்பு தரப்பினருக்கு தொடர்புள்ளது என தமிழ்த் தேசியக் மக்கள் முன்னணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டை பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆவது வாசிப்புமீதான விவாதத்தில் உரையாற்றும்போதே பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர மேற்படி குற்றச்சாட்டை நிராகரித்தார். “ இராணுவம் மற்றும் பொலிஸார் போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புபட்டுள்ளனர் என கேஜந்திரகுமார் பொம்மன்பலம் எம்.பி. குறிப்பிட்டார். இவ்வாறு நடக்கின்றதெனில் இடங்களின் பெயர், […]




