ரணில் -சஜித் விரைவில் நேரடி சந்திப்பு!
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க Ranil Wickremesinghe மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச Sajith Premadasa ஆகியோருக்கிடையில் நேரடி சந்திப்பு இடம்பெறவுள்ளது. 2026 ஜனவரி முற்பகுதியளவில் மேற்படி சந்திப்பு நடைபெறும் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களுக்கும், சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று கொழும்பில் நேற்று (31) நடைபெற்றது. ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் அக்கட்சியின் பிரதித் தலைவர் ருவான் […]





