அநுரவின் யாழ். உரைக்கு வலுக்கிறது எதிர்ப்பு!
இலங்கையில் அனைத்து இன மக்களும் நல்லிணக்கத்துடனேயே வாழ்கின்றனர். எனவே, இல்லாத இனவாதம் பற்றி கதைப்பதுதான் பிரச்சினை என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி SJP சுட்டிக்காட்டியுள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் S.M. Marikar மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பகுதிகளுக்கு விஜயம் செய்யும்போது அந்தந்த பகுதி மக்களை திருப்திபடுத்தும் வகையில் ஜனாதிபதி கருத்துகளை முன்வைத்துவருகின்றார். இது […]




