இலங்கை செய்தி

பொங்கல் விழாவில் தமிழ் மக்களிடம் ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழி!

  • January 15, 2026
  • 0 Comments

  எந்த மொழியைப் பேசினாலும், எந்த மதத்தைப் பின்பற்றினாலும் அனைத்துப் பிரஜைகளும் கௌரவத்துடன் வாழக்கூடிய இனவாதமற்ற, தேசிய ஒருமைப்பாடு நிறைந்த வளமான நாட்டை கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் நோக்கம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். யாழ்ப்பாணம், வேலணை, ஐயனார் கோவில் விளையாட்டு மைதானத்தில் இன்று (15) பிற்பகல் நடைபெற்ற வட மாகாண தைப்பொங்கல் விழாவில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். “தமிழ் மக்களின் முக்கியமானதொரு கலாசார தினமாக தைப்பொங்கல் தினத்தில் உங்களுடன் இணைவதற்கு வாய்ப்புக் […]

செய்தி

தமிழர் பாரம்பரிய முறைப்படி ஜனாதிபதிக்கு வரவேற்பு!

  • January 15, 2026
  • 0 Comments

வடமாகாண ‘பொங்கல் விழா’ இன்று யாழ். வேலணை தெற்கு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில் (ஐயனார் கோவில்) முன்றலில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தமிழர் பாரம்பரிய முறைப்படி வரவேற்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து பொங்கல் பானையில் அரிசியிட்டுப் பொங்கலை ஆரம்பித்து வைத்தார். இதன்போது வரவேற்புரை நிகழ்த்திய வடக்கு மாகாண ஆளுநர், நாட்டின் தலைவர் எம்முடன் இணைந்து தைப்பொங்கலைக் கொண்டாடுவது எமக்கெல்லாம் பெருமையையும் மகிழ்ச்சியையும் அளிக்கின்றது என குறிப்பிட்டார். சாதாரண மக்களின் வலிகளை […]

அரசியல் இலங்கை செய்தி

தடைகளைத் தகர்த்தெறிந்து இலக்கை அடைவோம்: ஜனாதிபதி முன்னிலையில் சந்திரசேகர் சூளுரை!

  • January 15, 2026
  • 0 Comments

“நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்தின்போது எத்தடை வரினும் அவற்றையெல்லாம் தகர்த்தெறிந்து இலக்கை நோக்கி பயணிப்போம்.” இவ்வாறு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் Ramalingam Chandrasekhar தெரிவித்தார். யாழில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்று நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது அவர் மேலும் கூறியவை வருமாறு, இலங்கையில் டித்வா புயலால் 400 இற்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். சிலர் காணாமல் போனார்கள். அதுமட்டுமல்ல முழு நாடும் ஸ்தம்பிதமடைந்தது. […]

பொழுதுபோக்கு

விஜய்யின் வெற்றிக்காக ரவி மோகன் தவம்!

  • January 14, 2026
  • 0 Comments

“தமிழக வெற்றிக் கழக TVK தலைவர் விஜய்யின் Vijay வெற்றிக்காக பிரார்த்தனை செய்கின்றேன்.” – என்று நடிகர் ரவி மோகன் Ravi Mohan தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி Modi பங்கேற்ற பொங்கல் விழா டெல்லியில் மத்திய இணையமைச்சர் எல். முருகன் இல்லத்தில் இன்று நடைபெற்றது. பொங்கல் விழாவில் பராசக்தி திரைப்படக் குழவினரும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வு நிறைவடைந்த பின்னர் நடிகர் ரவி ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டார். விஜய்யின் அரசியல் பயணம் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் […]

error: Content is protected !!