ராஜபக்ச ஆட்சிக்கு ‘இராஜதந்திர தலையிடி’ கொடுத்த தூதுவரை சந்தித்தார் மஹிந்த!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் இன்று சந்தித்து பேச்சு நடத்தினார். இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக செயல்படும் ஜுலி சங், எதிர்வரும் 16 ஆம் திகதி தாயகம் திரும்புகின்றார். தனது இராஜதந்திர பணியை முடித்துக்கொண்டு திரும்பும் அவர், கடந்த சில நாட்களாக முக்கியத்துவமிக்க சந்திப்புகளை கொழும்பில் நடத்தி வருகின்றார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை நேற்று சந்தித்திருந்தார். இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் அவர் இன்று பேச்சு நடத்தினார். “ அமெரிக்க-இலங்கை […]





