அமைச்சரவை மாற்றத்துக்கு தயாராகும் அநுர அரசு?
அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெறவுள்ளது என வெளியாகும் தகவலில் எவ்வித உண்மையும் இல்லை – என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். “ கல்வி அமைச்சு பதவியில் மாற்றம் வராது. பிரதமர் பதவியிலும் ஹரிணியே தொடர்வார். அமைச்சரவை மறுசீரமைப்பு கதையெல்லாம் கட்டுக்கதை ஆகும்.” – எனவும் அவர் கூறினார். […]






