ஆஸ்திரேலிய பிரதமருக்கு ‘அரசியல் தலையிடி’ – தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இராஜினாமா!
தேசிய பாதுகாப்பு விவகாரம் தொடர்பில் ஆஸ்திரேலிய பிரதமர் Anthony Albanese கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில், அவரது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் Philippa Brant பதவி விலகியுள்ளார். இவ்வாரம் அவர் உத்தியோகப்பூர்வமாக பதவி விலகிச்செல்வார் என ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரதமரின் வெளிவிவகாரம் தொடர்பான ஆலோசகர் சில மாதங்களுக்கு முன்னர் பதவி விலகி இருந்த நிலையிலேயே தற்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் விடைபெறுகின்றார். கடந்த டிசம்பர் 14 ஆம் திகதி ஆஸ்திரேலியா, சிட்னி போண்டி கடற்கரையில் […]




