இலங்கை செய்தி

வாய்வெடி உட்கொண்ட யானை உயிரிழப்பு: விசாரணை தீவிரம்!!

  • February 7, 2026
  • 0 Comments

திருகோணமலை மொரவெவ- அவ்வைநகர் Morawewa-Avvainaga பகுதியில் வாய்வெடி உட்கொண்ட நிலையில் யானையொன்று உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. யானையின் வாய் வீக்கமாக காணப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது. குறித்த யானை மரணித்தமை தொடர்பில் கிரிதல வனவிலங்கு திணைக்கள வைத்தியர் கலிங்கு ஆராய்ச்சி விசாரணையை முன்னெடுத்தார், வாய் வெடி உட்கொண்டமையினாலேயே குறித்த யானை உயிரிழந்துள்ளதாகவும் பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. இருந்த போதிலும் மொரவெவ பிரதேசத்தில் கடந்த வருடத்தில் மாத்திரம் ஆறு யானைகள் உயிரிழந்துள்ளதாகவும் […]

அரசியல் இலங்கை செய்தி

திருமலையில் பிக்குகளுக்கு எதிராக அவசரகால சட்டம் பயன்படுத்தப்பட்டதா?

  • February 7, 2026
  • 0 Comments

திருகோணமலை சம்பவத்தின்போது அவசரகால சட்டம் பயன்படுத்தப்பட்டது என முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய Dr. Harini Amarasooriya நிராகரித்தார். சாதாரண சட்டத்தின்கீழேயே நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது எனவும் அவர் கூறினார். அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி நேற்று SJP கடும் எதிர்ப்பை வெளியிட்டது. அவசர கால சட்டம், அடக்குமுறைக்காக பயன்படுத்தப்பட்டது எனவும், திருகோணமலையில் பிக்குகள்கூட அச்சட்டத்தின் கீழேயே கைது செய்யப்பட்டனர் எனவும் ரஞ்சித் மத்தும பண்டார Ranjith Madduma […]

செய்தி

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: சந்தேக நபர்களுக்கு மறியல் நீடிப்பு!

  • February 2, 2026
  • 0 Comments

பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட பிக்குகள் மற்றும் மேலும் 6 சந்தேகநபர்களுக்கான விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. திருகோணமலையில் புத்தர் சிலையொன்றை அகற்றுவதற்கு முற்பட்ட சம்பவத்தின்போது இடம்பெற்ற சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையிலேயே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு திருகோணமலை நீதவான் நீதிமன்றில் இன்று (02) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சம்பந்தப்பட்ட தரப்பினர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, குறித்த குழுவினரை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 09ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை செய்தி

திருகோணமலையில் நில அதிர்வு!

  • January 31, 2026
  • 0 Comments

கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை Trincomalee மாவட்டத்திலுள்ள ரொட்டவெவ Rotawewa மற்றும் கோமரங்கடவல Komarangadawala ஆகிய பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இலங்கை நேரப்படி இன்று மாலை 3.45 மணிக்கும் 3.50 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் நில அதிர்வு இடம்பெற்றுள்ளது. இலங்கையில் திருகோணமலை , கண்டி உள்ளிட்ட பகுதிகளில் சிறு அளவிலான நில அதிர்வுகள் அவ்வப்போது பதிவாகி வருகின்றன.

error: Content is protected !!