தடைகளைத் தகர்த்தெறிந்து இலக்கை அடைவோம்: ஜனாதிபதி முன்னிலையில் சந்திரசேகர் சூளுரை!
“நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்தின்போது எத்தடை வரினும் அவற்றையெல்லாம் தகர்த்தெறிந்து இலக்கை நோக்கி பயணிப்போம்.” இவ்வாறு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் Ramalingam Chandrasekhar தெரிவித்தார். யாழில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்று நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது அவர் மேலும் கூறியவை வருமாறு, இலங்கையில் டித்வா புயலால் 400 இற்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். சிலர் காணாமல் போனார்கள். அதுமட்டுமல்ல முழு நாடும் ஸ்தம்பிதமடைந்தது. […]





