‘டிட்வா’ சூறாவளி ஏற்பட முன்னர் 25 முறை இலங்கை மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது
நவம்பர் 23ஆம் திகதிக்கு முன்னர் 25 சந்தர்ப்பங்களில் ‘டிட்வா’ சூறாவளி குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினருக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை வளிமண்டலவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை வளிமண்டலவியலாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த தகவலை கூறியுள்ளது. ‘டிட்வா’ சூறாவளி குறித்த முன்கூட்டிய அறிவிப்புகளை வெளியிடுவது தொடர்பாக கடந்த சில நாட்களாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் மீது பல்வேறு தரப்பினரால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில் இலங்கை வளிமண்டலவியலாளர்கள் சங்கம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. தற்போதுள்ள அனர்த்த சூழ்நிலையில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் செயல்பாடு […]






