அரசியல் இலங்கை செய்தி

நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கைச்சாத்திட்டார் சஜித்!

  • January 7, 2026
  • 0 Comments

கல்வி அமைச்சராகவும் செயல்படும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று கையொப்பம் இட்டார். எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின் பின்னரே அவர் கையொப்பம் இட்டுள்ளார். தற்போதைய அரசாங்கத்தின் கல்விச் சீர்திருத்தங்கள் மாணவர்களின் மனதிற்கு பொருத்தமற்ற பல விடயங்களையும், பாட அலகுத் தொகுதிகளில் பல்வேறு பிழைகளைக் கொண்டு காணப்படுவது மற்றும் இது தொடர்பாக சரியான நடவடிக்கை எடுக்காமை உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டே நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது. […]

அரசியல் இலங்கை செய்தி

நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து சஜித் தலைமையில் ஆராய்வு!

  • January 7, 2026
  • 0 Comments

கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவருவது தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று இன்று (07) நடைபெற்றது. எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில், நாடாளுமன்ற வளாகத்திலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் மேற்படி கலந்துரையாடல் இடம்பெற்றது. கல்வி மறுசீரமைப்பு முறையாக இடம்பெறாமை, தரம் ஆறு ஆங்கில பாட புகத்தகத்தில் ஏற்பட்ட தவறு உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாகக்கொண்டே கல்வி அமைச்சரான பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது. மனோ கணேசன் உட்பட எதிரணிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற […]

அரசியல் இலங்கை செய்தி

கல்வி மறுசீரமைப்புக்கு சஜித் ஆதரவு: காலாசாரத்தை பாதுகாக்குமாறும் வலியுறுத்து!

  • January 3, 2026
  • 0 Comments

“கல்வி சீர்திருத்தம் என்ற போர்வையில் இலவசக் கல்வியில் மனித வாழ்வியலுக்குப் பொருத்தமற்ற விடயங்கள் புகுத்தப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.” இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச Sajith Premadasa தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கரவால் C.W.W. Kannangar இலங்கையில் இலவசக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. அது இன்றைய காலத்திற்கேற்றாற்போல் மாற்றியமைக்கப்பட வேண்டும். கல்வி முறையானது நவீனத்துவம் மற்றும் புத்தாக்க ரீதியாக சீர்திருத்தப்பட வேண்டும். செயற்கை நுண்ணறிவு உட்பட பாரிய புரட்சிகர தொழில்நுட்ப மாற்றங்கள் […]

அரசியல் இலங்கை செய்தி

ரணில், சஜித் சங்கமம் வங்குரோத்து அரசியலின் வெளிப்பாடு: அரசு சாட்டையடி!

  • January 3, 2026
  • 0 Comments

“ ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணைவது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எவ்வித சவாலும் இல்லை.” – என்று பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார். ஊழல், மோசடியுடன் ஈடுபட்டவர்களுடன் ஒன்றிணையமாட்டோம் எனக் கூறிய சஜித் தற்போது ரணிலுடன் இணைவது வங்குரோத்து அரசியலின் வெளிப்பாடு எனவும் அவர் சுட்டிக்காட்டினார். ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பவற்றை ஒன்றிணைப்பதற்குரிய முயற்சி வெற்றியளித்துள்ளது என மேற்படி கட்சிகளின் உறுப்பினர்கள் அறிவித்துவருகின்றனர். இந்த […]

அரசியல் இலங்கை செய்தி

ரணிலிடமிருந்து சஜித்துக்கு பறந்த அழைப்பு: அரசியல் களத்தில் நடக்க போவது என்ன?

  • January 2, 2026
  • 0 Comments

ரணில் விக்கிரமசிங்க Ranil Wickremesinghe மற்றும் சஜித் பிரேமதாசவுக்கிடையில் Sajith Premadasa முக்கியத்துவமிக்க கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பதற்காக சஜித் பிரேமதாசவை, நேற்று (01) தொலைபேசிமூலம் தொடர்பு கொண்டுள்ளார் ரணில் விக்கிரமசிங்க. இருவரும் முதலில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டுள்ளதுடன், அரசியல் பற்றியும் கலந்துரையாடியுள்ளனர் என தெரியவருகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வெளியேறி ஐக்கிய மக்கள் சக்தியை சஜித் பிரேமதாச உருவாக்கியதில் இருந்து அவருக்கும், ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான அரசியல் உறவில் முறிவு ஏற்பட்டது. கடந்த ஜனாதிபதி […]

அரசியல் இலங்கை செய்தி

“புத்தாண்டில் புதிய அமைச்சை கோருகிறார் சஜித்”

  • January 1, 2026
  • 0 Comments

“இவ்வருடத்திலாவது இடர் முகாமைத்துவ விடயத்தை அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சாக மாற்றி, இதன் கீழ் புதிய நிறுவனங்களை ஸ்தாபிக்க வேண்டும்.” இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச Sajith Premadasa இன்று (01) தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ நாட்டில் ஏற்பட்ட பேரிடரால் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்புகளும் ஏற்பட்டன. பலர் காணாமல் போயுள்ளனர். சில வாரங்களுக்கு முன்பு நடந்த துயர் மிகு நிலையை நாம் மறந்துவிடக் கூடாது. பாதிக்கப்பட்ட மக்களின் […]

இலங்கை செய்தி

ரணில் -சஜித் விரைவில் நேரடி சந்திப்பு!

  • December 31, 2025
  • 0 Comments

  ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க Ranil Wickremesinghe மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச Sajith Premadasa ஆகியோருக்கிடையில் நேரடி சந்திப்பு இடம்பெறவுள்ளது. 2026 ஜனவரி முற்பகுதியளவில் மேற்படி சந்திப்பு நடைபெறும் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களுக்கும், சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று கொழும்பில் நேற்று (31) நடைபெற்றது. ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் அக்கட்சியின் பிரதித் தலைவர் ருவான் […]

அரசியல் இலங்கை செய்தி

தெற்கு அரசியலில் திடீர் திருப்பம்: கொழும்பை பரபரப்பாக்கியுள்ள “அரசியல் சந்திப்பு”

  • December 30, 2025
  • 0 Comments

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பவற்றை ஒன்றிணைப்பதற்குரிய முயற்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என அறியமுடிகின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் கொழும்பில் இன்று (30) முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று நடந்துள்ளது. ரணில் விக்கிரமசிங்கவின் சகாக்களான ருவான் விஜேவர்தன, அகில விராஜ்காரியவசம் மற்றும் நவீன் திஸாநாயக்க ஆகியோர் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை அவசரமாக சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர். ருவான் விஜேவர்தன ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராகவும், அகிலவிராஜ் காரியவசம் உப தலைவராகவும் பதவி […]

அரசியல் இலங்கை செய்தி

டித்வா புயல்: சட்டக் குழுவை அமைத்தது சஜித் அணி!

  • December 30, 2025
  • 0 Comments

பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி சட்டக் குழுவொன்றை ஸ்தாபிக்கவுள்ளது என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச Sajith Premadasa அறிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, டித்வா சூறாவளி ஏற்பட்ட சமயத்திலும் அதற்குப் பின்னரும், நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியேயும் அரசாங்கத்தால் பல உறுதிமொழிகள் வழங்கப்பட்டன. இவ்வாறு உறுதியளிக்கப்பட்ட சலுகைகள், நிவாரணங்கள், அவற்றுக்குத் தேவையான வளங்கள் மற்றும் நிதியை பெற்றுக் கொடுப்பதில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது. ஒரு தகரத் துண்டு […]

அரசியல் இலங்கை செய்தி

வெளிநாட்டு உதவி போதாது: நன்கொடையாளர் மாநாட்டை உடன் நடத்துமாறு வலியுறுத்து!

  • December 27, 2025
  • 0 Comments

பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மீண்டெழுவதற்கு இன்னும் போதுமான சர்வதேச உதவிகள் கிடைக்கப்பெறவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச Sajith Premadasa இன்று (27) சுட்டிக்காட்டினார். எனவே, சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் மீண்டும் வலியுறுத்தினார். இது தொடர்பில் சஜித் பிரேமதாச மேலும் கூறியவை வருமாறு, “பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ள நிவாரணங்கள் விரைவில் வழங்கப்பட வேண்டும். முகாம்களில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களில் […]

error: Content is protected !!