ஆளுங்கட்சிக்கு தலையிடியாக மாறிய கொள்கலன்கள்: விசாரணை ஆரம்பம்!
கொழும்பு துறைமுகத்தில் இருந்து 323 கொள்கலன்கள் கட்டாய பௌதீகப் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் விடுவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் விசாரணை ஆரம்பமாகியுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை மூன்று மாதங்களுக்குள் நிறைவு செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. கொள்கலன் விடுப்பு விவகாரம் தொடர்பில் ஆராய்ந்து, அறிக்கையிடுவதற்கான நியமிக்கப்பட்ட விசேட நாடாளுமன்றக் குழு நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தலைமையில் கூடியது. குழுவின் எதிர்காலச் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் முறை மற்றும் குழுவிற்கு அழைக்கப்பட வேண்டிய தரப்பினர் தொடர்பில் ஆரம்பகட்ட கலந்துரையாடல்கள் இதன்போது இடம்பெற்றன. மூன்று […]




