அரசியல் இலங்கை செய்தி

தெற்கு அரசியலில் திடீர் திருப்பம்: கொழும்பை பரபரப்பாக்கியுள்ள “அரசியல் சந்திப்பு”

  • December 30, 2025
  • 0 Comments

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பவற்றை ஒன்றிணைப்பதற்குரிய முயற்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என அறியமுடிகின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் கொழும்பில் இன்று (30) முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று நடந்துள்ளது. ரணில் விக்கிரமசிங்கவின் சகாக்களான ருவான் விஜேவர்தன, அகில விராஜ்காரியவசம் மற்றும் நவீன் திஸாநாயக்க ஆகியோர் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை அவசரமாக சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர். ருவான் விஜேவர்தன ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராகவும், அகிலவிராஜ் காரியவசம் உப தலைவராகவும் பதவி […]

அரசியல் இலங்கை செய்தி

டித்வா புயல்: சட்டக் குழுவை அமைத்தது சஜித் அணி!

  • December 30, 2025
  • 0 Comments

பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி சட்டக் குழுவொன்றை ஸ்தாபிக்கவுள்ளது என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச Sajith Premadasa அறிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, டித்வா சூறாவளி ஏற்பட்ட சமயத்திலும் அதற்குப் பின்னரும், நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியேயும் அரசாங்கத்தால் பல உறுதிமொழிகள் வழங்கப்பட்டன. இவ்வாறு உறுதியளிக்கப்பட்ட சலுகைகள், நிவாரணங்கள், அவற்றுக்குத் தேவையான வளங்கள் மற்றும் நிதியை பெற்றுக் கொடுப்பதில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது. ஒரு தகரத் துண்டு […]

அரசியல் இலங்கை செய்தி

கொழும்பில் நாளை “அரசியல் சமர்”! மண்கவ்வுமா “மனசாட்சி”?

  • December 30, 2025
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் (NPP) நாளை (31) முக்கியமானதொரு அரசியல் சமருக்கு முகம்கொடுக்கின்றது. கூட்டு எதிரணியின் வியூகத்தை தோற்கடித்து இச்சமரில் வெல்வதற்கு தேசிய மக்கள் சக்தி தீவிரமாக செயல்பட்டுவருகின்றது. மறுபுறத்தில் கூட்டு வியூகத்தை தக்கவைக்க ஐக்கிய மக்கள் சக்தி (SJP) போராடிவருகின்றது. இலங்கையில் உள்ள உள்ளாட்சிசபைகளில் கொழும்பு மாநகரசபையென்பது (CMC) மிக முக்கியத்துவம்மிக்க சபையாகக் கருதப்படுகின்றது. எனவேதான், அச்சபையின் வரவு- செலவுத்திட்டம் தேசிய அரசியலிலும் எதிரொலிக்கின்றது. கொழும்பு மாநகரசபையின் (Colombo Municipal Council) 2026 ஆம் […]

அரசியல் இலங்கை செய்தி

விருந்து வைத்தது உண்மைதான்: சர்ச்சை வீடியோ குறித்து ஹிருணிக்கா விளக்கம்!

  • December 29, 2025
  • 0 Comments

ஐக்கிய மக்கள் சக்தியின் (SJP) உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர Hirunika Premachandra விருந்துபசாரமொன்றின்போது ஆடும் வீடியோ சமூகவலைத்தளங்களில் தற்போது வைரலாகியுள்ளது. கொழும்பு மாநகரசபையின் வரவு- செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டதாலதான் அவர் விருந்து வைத்து, கொண்டாடுகின்றார் என சிலர் கருத்து வெளியிட்டுவருகின்றனர். இந்நிலையில் இந்த வீடியோ தொடர்பில் ஹிருணிக்கா பிரேமசந்திர விளக்கமளித்துள்ளார். அவர் கூறியவை வருமாறு, “ நானும்,எனது தொகுதி அமைப்பாளர் உள்ளிட்ட கட்சி செயற்பாட்டாளர்கள் பங்கேற்ற நிகழ்வொன்று தொடர்பான வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. கடுவலை தொகுதியில் ஐக்கிய […]

அரசியல் இலங்கை செய்தி

ஊடகங்கள்மீது கை வைத்தால் என்.பி.பி. அரசாங்கத்தின் கதை முடியும்!

  • December 29, 2025
  • 0 Comments

ஊடகங்கள்மீது கைவைக்க முற்பட்டால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் காணாமல்போக நேரிடும் என்று ஐக்கிய மக்கள் சக்தி (SJP) நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் (S.M. Marikar) எச்சரிக்கை விடுத்தார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு எச்சரித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ ஊடக நிறுவனங்கள் தவறிழைத்தால் , தவறான செய்திகளை வெளியிட்டால் அதற்கு எதிராக சாதாரண சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க முடியும். ஊடகத்துறை அமைச்சில் முறைப்பாடும் […]

அரசியல் இலங்கை செய்தி

கொழும்பு மாநகர சபையில் 31 ஆம் திகதி பலப்பரீட்சை!

  • December 26, 2025
  • 0 Comments

கொழும்பு மாநகரசபையின் (Colombo Municipal Council) 2026 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் (budget) எதிர்வரும் 31 ஆம் திகதி மீண்டும் முன்வைக்கப்படவுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் (NPP) ஆளுகையின்கீழுள்ள கொழும்பு மாநகரசபையின் முதலாவது வரவு- செலவுத் திட்டம் கடந்த 22 ஆம் திகதி முன்வைக்கப்பட்டது. இதன்போது வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 57 வாக்குகளும், எதிராக 60 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதற்கமைய மேலதிக 3 வாக்குகளால் பாதீடு தோற்கடிக்கப்பட்டது. இது தேசிய மக்கள் சக்திக்கு […]

அரசியல் இலங்கை செய்தி

அன்று பிரிட்டனுக்கே கடன் வழங்கியது இலங்கை : இன்று யாசகம் பெறும் நிலை!

  • December 26, 2025
  • 0 Comments

“ 2ஆம் உலகப்போரின்போது பிரிட்டனுக்கே கடன் வழங்கிய நாடுதான் இலங்கை. ஆனால் இன்று வெளிநாடுகளிடம் யாசகம் பெறும் நிலைமையே காணப்படுகின்றது.” இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் (SJP) சிரேஷ்ட உப தலைவரான முன்னாள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல (Lakshman Kiriella) தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று (26) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ மன்னர் ஆட்சிகாலத்தில் இலங்கை தன்னிறைவடைந்திருந்தது. யாசகம் பெற்று வாழவில்லை. […]

அரசியல் இலங்கை செய்தி

மனசாட்சி பற்றி பேசும் என்.பி.பி. பிள்ளையான் தரப்பின் ஆதரவை எந்த அடிப்படையில் பெற்றது?

  • December 25, 2025
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தியினர் NPP மனசாட்சி பற்றி கதைப்பது நகைப்புக்குரிய விடயமாகும் – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் Mujibur Rahma தெரிவித்தார். கொழும்பு மாநகரசபையில் உள்ள உறுப்பினர்கள் மனசாட்சியின் பிரகாரம் செயல்பட வேண்டும் என மாநகர மேயர் கோரிக்கை விடுத்திருந்தார். கொழும்பு மாநகரசபையின் பாதீடு தோற்கடிக்கப்பட்ட பின்னரே அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்தார். இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட முஜிபூர் ரஹ்மான் எம்.பி. கூறியவை வருமாறு, “புதியதொரு அரசியல் […]

error: Content is protected !!