இலங்கை செய்தி

“பலாலி விமான நிலையத்தில் நவீன ஸ்கேனர்”

  • January 12, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலிய எல்லைப் படையினரால் , இலங்கை சுங்க திணைக்களத்திற்கு, இரண்டு உயர் தொழில்நுட்ப “ஸ்கேனர்”கள் வழங்கப்பட்டன. காங்கேசன்துறை துறைமுகத்தில் இதற்குரிய நிகழ்வு இன்று நடைபெற்றது. இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவர் மேத்யூ டக்வொர்த், இலங்கை சுங்க இயக்குநர் ஜெனரல் சீவலி அருகோடவிடம் “ஸ்கேனர்”களை கையளித்தார். சுங்க இயக்குநர் ஜெனரல் பால் எட்வர்ட்ஸ், ஆஸ்திரேலிய தூதரக அதிகாரிகள் உள்ளிட்டவர்களும் நிகழ்வில் பங்கேற்றனர். யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகத்தில் பயன்படுத்துவதற்காகவே மேற்படி ஸ்கேனர்கள் வழங்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!