“ஷிரந்தியை இலக்கு வைத்து மஹிந்தவை வீழ்த்த முயற்சி”
“ஷிரந்தி ராஜபக்சவை Shiranthi Rajapaksa இலக்கு வைப்பதன்மூலம் மஹிந்தவை Mahinda Rajapaksa வீழ்த்திவிடலாம் என NPP அரசாங்கம் நினைக்கின்றது. அது ஒருபோதும் நடக்காது.” இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே Manoj Gamage தெரிவித்தார். சிரிலிய விவகாரம் தொடர்பில் பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால், FCID விசாரணை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இது தொடர்பான விசாரணைக்கு ஷிரந்தி ராஜபக்ச அண்மையில் அழைக்கப்பட்டிருந்தார். எனினும், அவர் முன்னிலையாகவில்லை. தனது சட்டத்தரணிகள் ஊடாக இரு […]







