தனி வழியா, கூட்டணியா? தெற்கு அரசியலில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சந்திப்பு!
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பவற்றை ஒன்றிணைப்பதற்குரிய முயற்சி வெற்றிகரமான திசையை நோக்கி நகர்ந்துகொண்டிருகின்றது. இதன் அடுத்தக்கட்டமாக இரு கட்சிகளின் தலைவர்களும் நேரடி சந்திப்பை நடத்தவுள்ளனர். இதற்கான ஏற்பாடு தற்போது இடம்பெற்றுவருகின்றது. ஐக்கிய மக்கள் சக்தி உதயமாகி எதிர்வரும் 10 ஆம் திகதியுடன் ஆறாண்டுகள் ஆகின்றன. அதற்கு முன்னதாக இருவரும் நேரடி சந்திப்பில் ஈடுபடுவார்கள் என தெரியவருகின்றது. இதன்போது எட்டப்படும் முடிவுகளின் அடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சி மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் […]




