ராஜபக்ச அணிக்கு டெல்லி அழைப்பு: குடியரசு தின நிகழ்விலும் பங்கேற்பு!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச Mahinda Rajapaksa தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கட்சியின் உயர்மட்ட குழுவொன்று இந்தியா செல்லவுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa தலைமையிலான குழுவினரே டெல்லி செல்லவுள்ளனர். இந்தியாவின் குடியரசு தினம் ஜனவரி 26 ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது. இந்நிகழ்வில் பங்கேற்பதற்கு, இந்திய அரசாங்கம் இலங்கையின் முக்கிய தரப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியும் உள்ளடங்குகின்றது. இதற்கமையவே மொட்டு கட்சி குழுவினர் இந்தியா செல்லவுள்ளனர். […]




