டி20 தொடர் – மூன்றாவது போட்டியில் நாணய சுழற்சியில் தாமதம்
பிரபல பாகிஸ்தான் அணி இலங்கைக்கு சுற்று பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடி வருகிறது.
அந்தவகையில், இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டி தம்புள்ளை(Dambulla) மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடி இலங்கையை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது போட்டி மழை காரணமாக இன்னும் ஆரம்பிக்காமல் உள்ளது.
மேலும், இரண்டாவது போட்டியை போல இந்த போட்டியும் மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த போட்டியும் கைவிடப்படும் நிலையில் உள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டதால் பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.





