டி20 தொடர் – முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரபல நியூசிலாந்து அணி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
அந்தவகையில், இன்று முதலாவது டி20 போட்டி நாக்பூரில்(Nagpur) நடைபெற்றது.
இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தெரிவு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களுக்கு 7 விக்கெட் இழப்பிற்கு 238 ஓட்டங்கள் குவித்தது.
இந்திய அணி சார்பில், அபிஷேக் சர்மா(Abhishek Sharma) 84 ஓட்டங்களும் ரிங்கு சிங்(Rinku Singh) 44 ஓட்டங்களும் குவித்தனர்.
இந்நிலையில், 239 ஓட்ட இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி இந்திய பந்து வீச்சில் திணறி தோல்வியை தழுவியது.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்களை இழந்து 190 ஓட்டங்களை மட்டுமே பெற்று கொண்டது.
நியூசிலாந்து அணி சார்பில் கிளென் பிலிப்ஸ்(Glenn Phillips) 78 ஓட்டங்களும் மார்க் சாப்மேன்(Mark Chapman) 39 ஓட்டங்களும் குவித்தனர்.
இதன்மூலம் 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.




