இலங்கை செய்தி

யாழில் காவல் நிலையம் அருகே வாள்வெட்டு – பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்

யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பொலிஸ் நிலையம் அருகில் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பி சென்ற கும்பலை நோக்கி பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தையடுத்து அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

சிசிரிவி காணொளிகளை கொண்டு வன்முறைக் கும்பலை தேடி பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இரவு வேளையிலும் தெல்லிப்பழை மற்றும் மல்லாகம் பகுதியில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வன்முறைச் சம்பவத்தில் எங்களுக்கு தொடர்பில்லை என தெரிவித்து ஒருவர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை குறித்த வன்முறை சம்பவம் தொடர்பில் தனது காருக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யழ்ப்பாணம் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்திற்கு அருகில்ஹயஸ் வானில் வந்த இனந்தெரியாத குழு மோட்டார் சைக்கிள் வந்த இளைஞர் மீது இன்று திங்கட்கிழமை மாலை 5.30 மணியளவில் சரமாரியாக வாள்வெட்டு தாக்குதல் நடத்தியது.

இதனையடுத்து வன்முறை கும்பல் ஹயஸ் வானில் மருதனார்மடம் நோக்கி தப்பிச் செல்லும் போது துரத்தி சென்ற பொலிஸார் மல்லாகம் பகுதியில் வாகனத்துக்கு துப்பாக்கி பிரயோகம் நடத்தினர்.

தப்பியோடிய வன்முறை கும்பலை சேர்ந்தவர்களை கைது செய்ய தெல்லிப்பழை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மல்லாகம் விசாலாட்சி வித்தியாலயம் அருகில் வீதியில் இருந்து வாள்கள் மற்றும் துப்பாக்கி ரவைகள் என்பனவும் பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

வாள்வெட்டில் காயமடைந்த 28 வயதான இளைஞர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!