இலங்கை கோப்பாய் பகுதியில் வாள்வெட்டு தாக்குதல் – ஒருவர் பலி, இருவர் கைது
யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் பொதுமகன் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டு தரப்பினருக்கு இடையே நேற்று முன்தினம் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார்.
தனிப்பட்ட தகராறு வாய்த்தர்க்கமாக மாறியதில் இந்த வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றதாக கோப்பாய் காவல்நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
இருபாலை மடத்தடி பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவரே குறித்த சம்பவத்தில் உயிரிழந்தார்.
உடலம் பிரேத பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டு, பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.





