ஐரோப்பா

ஆஸ்திரியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சுவிஸ் விமானம் : பணியாளர் உயிரிழப்பு!

கேபினில் ஏற்பட்ட புகை காரணமாக சுவிஸ் விமானம் ஒன்று ஆஸ்திரியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த விமான பணிப்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டிச. 23 அன்று புக்கரெஸ்டில் இருந்து சூரிச் சென்ற விமானம், காக்பிட் மற்றும் கேபினில் எஞ்சின் கோளாறுகள் மற்றும் புகை நிரம்பியதால் கிராஸுக்கு திருப்பி விடப்பட்டது என்று சுவிஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நேரம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த பணியாளர் நேற்று (30.12) உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் அவருக்கு இரங்கல் வெளியிடப்பட்டுள்ளது. அவரது இழப்பு நம் அனைவரையும் ஆழ்ந்த அதிர்ச்சியிலும் துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது. எங்கள் எண்ணங்கள் அவரது குடும்பத்துடன் உள்ளன என சுவிஸ் விமான நிறுவனத்தின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!