10 வீதமான நீரிழிவு நோயாளிகளுக்கு நோய்க்காரணியாகிய இனிப்பு பானங்கள்
சுவிட்சர்லாந்து உட்பட உலகளவில் நீரிழிவு நோயாளிகளில், 10வீதமானோருக்கு, இனிப்பு பானங்களே நோய்க்காரணியாக உள்ளது என்று, நேச்சர் மெடிசின் இதழில் வெளியாகியுள்ள ஒரு புதிய ஆய்வு முடிவு கூறுகிறது.
அத்துடன், 30 வகையான இருதய நோய்களில் ஒன்று, இனிப்பு பானங்களின் நுகர்வுடன் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளது என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில், 2020 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்ட ரைப் 2 நீரிழிவு நோயாளிகளில் 10.5% மானோர், குளிர்பானங்களை அருந்துபவர்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
இதய நோய்களின் விடயத்தில், குளிர்பானங்கள் 3.1% காரணமாக இருக்கின்றன.
சுவிட்சர்லாந்தின் புள்ளிவிவரங்கள் ஜெர்மனி, ஒஸ்திரியா, ஸ்பெயின் மற்றும் ஸ்வீடன் போன்ற பிற ஐரோப்பிய நாடுகளின் புள்ளிவிவரங்களுடன் ஒத்தவையாக உள்ளன.
1990 – 2020 க்கு இடையில், இனிப்பு பானங்கள் காரணமாக நீரிழிவு நோயாளிகளின் வீதம் உலகளவில் 1.3% அதிகரித்துள்ளது.
இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளில் உள்ள அனைத்து ரைப் 2 நீரிழிவு நோயாளிகளில், கிட்டத்தட்ட கால் பகுதியினருக்கு இனிப்பு பானங்கள் காரணமாக உள்ளன.
ஆபிரிக்காவில், ரைப் 2 நீரிழிவு நோயாளிகள் 1990 – 2020 க்கு இடையில் 8.8 சதவீதத்தினால் அதிகரித்துள்ளனர்.
ஜெனீவா பல்கலைக்கழக மருத்துவமனைகள் மற்றும் சுவிட்சர்லாந்தில் உள்ள லொசேன் உட்பட, உலகெங்கிலும் உள்ள 200 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்த சர்வதேச ஆய்வில் பங்கேற்றன.