முறியடிக்கப்பட்ட பயங்கரவாத தாக்குதல் குறித்து ஸ்வீடன் பிரதமர் அறிவிப்பு
ஸ்வீடன் நாட்டு பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சன், தனது நாட்டில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த தீவிரவாத தாக்குதல் தடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக சில மணித்தியாலங்களில் பாதுகாப்பு மட்டம் உயர்த்தப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்வீடிஷ் பாதுகாப்பு சேவை, தனது நாடு தற்போது தீவிரவாதிகளின் இலக்காக மாறியுள்ளதாக கூறுகிறது.
இதற்கிடையில், ஸ்வீடனுக்குச் செல்லும் தனது குடிமக்களுக்கு பயங்கரவாதத் தாக்குதல் நடக்க கூடும் என எச்சரிக்கையுடன் இருக்குமாறு அமெரிக்காவும் எச்சரித்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஸ்வீடனில் பல இடங்களில் குர்ஆன் பிரதிகள் எரிக்கப்பட்டமை இந்த பயங்கரவாத அச்சுறுத்தல்களின் ஆரம்பம் என தெரிவிக்கப்படுகிறது.
இஸ்லாமிய வழிபாட்டாளர்கள் புனிதமாக கருதும் குரானை எரிக்க ஸ்வீடன் அரசு அனுமதித்திருப்பது பேச்சுரிமையின் கீழ் வருகிறது.
முஸ்லிம் தேசத்தை அவமதிப்பது சுதந்திரமான சிந்தனையல்ல என்பதை மேற்கத்திய நாடுகளுக்கு வலியுறுத்துவேன் என துருக்கி ஜனாதிபதி எர்டோகன் முன்னர் தெரிவித்திருந்தார்.