லூனா 25 சந்திரனின் சுற்றுப்பாதையில் நுழைகிறது
கடந்த வெள்ளிக்கிழமை, ரஷ்யாவின் வோஸ்டோக்னி விண்வெளி நிலையத்தில் இருந்து ஏவப்பட்ட லூனா 25, நிலவின் சுற்றுவட்டப் பாதையில் நுழைந்துள்ளது.
1976ஆம் ஆண்டுக்குப் பிறகு நிலவின் சுற்றுப்பாதையில் நுழைந்த முதல் ரஷ்ய விண்கலம் இதுவெனத் தெரிவிக்கப்படுகிறது.
சந்திரயான் 3 திட்டத்தின் கீழ் இந்தியாவும் நிலவின் தென் துருவத்தை அடையும் பின்னணியில், ரஷ்யா நிலவுக்கான பயணத்தில் உள்ளது.
லூனா 25 சந்திர சுற்றுப்பாதையில் நுழைவதற்கு சில நாட்களுக்கு முன்பு, சந்திரயான் 3 ஆகஸ்ட் 23 அல்லது 24 ஆம் திகதி நிலவில் தரையிறங்க திட்டமிடப்பட்டுள்ளது.
லூனா 25 வரும் திங்கட்கிழமை 21ஆம் திகதி நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ளது.
அதன்படி, இது வெற்றி பெற்றால், நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை தரையிறக்கும் முதல் நாடு என்ற பெருமையை இந்தியா அல்ல, ரஷ்யாதான் பெறும்.